(GSC)
சது/றாணமடு இந்து மகா வித்தியாலய இல்ல தடகள திறனாய்வுப் போட்டி 2017.02.18ம் திகதி சனிக் கிழமை அன்று பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் திரு.தியாகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் அவர்களும் விஷேட அதிதியாக சம்மாந்துறை வலயகல்விப் பணிமனையின் கணக்காளர் அவர்கள் அடங்கலாக அதிகமானோர் கலந்து விழாவை சிறப்பித்ததுடன் நாவிதன்வெளிக் கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், கிராம உத்தியோகஸ்த்தர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், ஆலயங்களின் பரிபாலன சபையினர், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்
.விளையாட்டு நிகழ்வில் மைதான நிகழ்ச்சிகள், சுவட்டு நிகழ்ச்சிகள் என்பன சிறப்பாக நடைபெற்றதுடன் சிரேஷ்ட ,இடநிலைப் பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகளும், மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள். உடற்பயிற்சி கண்காடசி, கழகங்களின் அஞ்சலோட்டம், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் முதல் தடவையான வித்தியாலயத்தில் உருவாக்கப்பட்ட ஆண் கெடேக் அணியினரின் அணிவகுப்பு என்பன இடம் பெற்றதுடன் சேரன், சோழன், பாண்டியன் இல்லங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளித்தன.
இதில் 2017 சம்பியனாக பாண்டியனில்லம் தெரிவானது...
GsC
GsC




கருத்துரையிடுக