தற்போதைய கிறீன்லைற் வி. க நிருவாக நான்கு வருட பதவிக்காலத்தின் சாதனைகளும் சறுக்கல்களும்....
2013.02.24 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சாந்தகுமார் தலைவராகவும், நா.ரவிகுமார் செயலாளராகவும், பகிரதன் பொருளாளராகவும் சபையால் தெரிவு செய்யப்பட்டனர்... பின்னர் 2013 டிசம்பர் மாதமளவில் சாந்தகுமார் வெளிநாடு சென்ற காரணத்தினால் தலைவராக உப தலைவராக இருந்த திரு. கிருபைராசா பொறுப்பேற்றார். மதனராஜ் உப தலைவராக நியமிக்கப்பட்டார். முதலாவது பதவிக்காலங்கள் (2013-2015), இரண்டாவது பதவிக்காலம் (2015 - 2017.02.24 ம் திகதியுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெறுகின்றது..
#4வருட_நிருவாக_கால_சாதனைகள்..
1. 2011/2012 கழகம் பிரிவு ஒன்றை சந்தித்த காலப்பகுதியில் கழகத்தின் அடுத்த கட்டம் என்ன கழக கிரிக்கட் அணியின் நிலை என்ன என எல்லோரும் சிந்தித்த நிலையில் கழகம் பொறுப்பெற்கப்பட்டது. சாந்தகுமாரின் தீவிர முயற்சியாலும் இரவு பகலான செயற்பாடுகளாலும் இருப்பவர்களை வைத்து கிரிக்கட், கரப்பந்து ஆரம்பிக்கப்பட்டது. கிரிக்கட் இன்று வரை தொடர்கிறது வெற்றி பெறா விட்டாலும் விளையாடிக் கொண்டே இருப்பதற்காக.
2. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் பல கழகங்கள் இருந்தும் இன் நிருவாகத்தின் தொடர்ச்சியான எம் பதிவின் முலம் பதிவிலக்கம் EP/36/A/NAV/01 கிடைத்தது மிகப்பெரும் கௌரவமாகும்.

3. கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களத்தால் இன் நிருவாகத்தின் தொடர்ச்சியாக பதிவின் காரணமாக முதலாம் பதிவு எண் சான்றிதழ் மூன்று தடவை பெறப்பட்டுள்ளது.
4. தொடர்ச்சியாக 5 சம்பியன் கிண்ணங்கள் 2015 ல் அள்ளப்பட்டதுடன் அதே வருடம் 7 சம்பியன் கிண்ணங்கள் அடங்கலாக 13 கிண்ணங்கள்.
5. நிருவாக சபை தலைவர், செயலாளர், பொருளாளர் தாம் நடாத்தும் சுற்றுப்போட்டிகளில் பங்கு பற்றி விளையாட முடியாது. எனும் கழக யாப்பின் படி இன்றுவரை செயற்படுகின்றது.
6. 2012-2016 வரை 12 சம்பியன் கிண்ணங்கள் அடங்கலாக 25 ற்கு அதிகமான கிண்ணங்கள் கழகம் குவித்துள்ளது..

7. பொது மைதானத்திற்கான மின்னினைப்பு எமது அயராத முயற்ச்சியால் பெறப்பட்டது..

8.மின்னெளி கரப்பந்தாட்ட மைதானம் ரூ 100000/= ம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
9. இதுவரை ரூபா 50,000/= வரை கழகம் மூலம் சமூக சேவைக்காக செலவு செய்யப்பட்டுள்ளது..
10. கழகத்திற்கென தனி Website , Facebook, Twitter, @ email என்பன எமது கழகத்திற்கென உருவாக்கப்பட்டுள்ளது..
11.இரு பெரும் போட்டி நிகழ்வுகளை( கரப்பந்து, கிரிக்கட்) ஒரேதடவையில் திட்டமிட்டு நடாத்துகின்றமை..
12. எமது பகுதி மரண வீடுகளுக்கு இலவசமாக நேட்டீஸ், கதிரைகள், ஒலிபெருக்கி சாதனங்கள் என்பன வழங்கப்படுகின்றது.
இன்னும் பல................
#சறுக்கல்கள் #சவால்கள்.
1. 2016ல் தனிப்பட்டவர்களின் பிரச்சினையை கழக பிரச்சினையாக, அரசியல் பிரச்சினையாக மாற்றி கழகத்தை பிரிக்க முற்பட்ட போதும் சிலர் பிரிந்த போதும் கழகம் சார்பில் நாம் யாருடனும் பிரச்சினை தொடர்பாக இன்றுவரை கதைத்ததில்லை ஏன் பிரிந்தீர்கள் என கேட்டதுமில்லை இனியும் கதைக்க போவதுமில்லை ( தனிப்பட்ட பிரச்சினைகளில் கழகம் தலையிடாது)<br
2. 2015 நவம்பர் மாதம் கழக தீவிர விசுவாசி தட்சணாமூர்த்தியின் இழப்பு பேரிழப்பாக இருந்தது..
3. ஒருவரின் சவால் காரணமாக கழக கிரிக்கட் அணி இன்னும் 6 வருடத்தினுள் ஒரு கிண்ணம் வேல்ல வேண்டும் புதிய நிருவாகமும் அதற்கு உதவும் என நம்புகின்றோம்..

இவ்வாறான பல விடயங்கள் உள்ளடங்கலாக எமது இரு தடவை பதவிக்காலம் நான்கு வருடம் 2017.02.24. உடன் நிறைவு பெறுகிறது.. இனிவரும் நிருவாக சபையினரும் சிறப்பாக செயற்படுவார்கள் எமது அனுபங்களையும் ஆதரவுகளையும் ஒத்துளைப்புக்களையும் வழங்கவுள்ளோம். விரைவில் புதிய நிருவாகம் உதயமாகவுள்ளது..

-(GsC செயலாளர்)

கருத்துரையிடுக