GuidePedia

0
அம்பாரை மாவட்டத்தில் புராதன பிரமாண்டமான ராஜதானி கண்டுபிடிப்பு.
                                                                     (GsC மதன்)
 அம்பாரை மாவட்டதின் ரஜகல பிரதேசத்தில் காணப்படும் புளுக்குனாவ ரஜமகா விகாரை எச்சங்களினை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை இங்கு 2016-09-22 அன்று நண்பர்பர்களுடன் எதர்ச்சியாக செல்ல வாய்ப்புக்கிடைத்தது   அங்கு எங்களை வியக்க வைக்கும் பல்வேறு ஆச்சர்ங்களினை
 காணமுடிந்தது.

சுமார் 300M உயர்ந்த படர்ந்த மலைமேல் காணப்டும் இவ் இராஜதானியானது  கருங்கற்ளாலான பிரதான அரச மண்டபங்கள்  திறந்த மண்டபங்கள் காவற்கற்கள் சந்திரவட்டக்கற்கள் புத்த சிலைமனைகள்  கிட்டத்தட்ட. இங்கு  25க்கும் மேற்பட்ட மண்டபங்ளை அவதானிக்க முடிகின்றது. இவை தற்பொழுது கற்றூண்கள் அடித்தளங்ளைக் கொண்டனவாகவுள்ளது.

 செங்கற்களினால் கட்டப்பட்ட சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்ற இரண்டு தாதுகோபுரங்கள் பாறைளினாற் குடைந்தெடுக்கப்பட்ட இரு கிடாரங்கள் கல்வெட்டுக்கள் மற்றும் அவுகண புத்தர் சிலைக்கு ஒப்பான கருங்கற் சிலையொன்றினையும் அவ் இடத்தில் இருந்து 800M உயரத்தில்  குகைகளும் அங்கு சிலவற்றில் கல்வெட்டுக்கள் ஓவியங்கள் போன்றவற்றையும் காணமுடிகின்து. 


இங்கு அகழ்வுப்பணிகள் குறிப்பிட்ட அளவிலேயே  இடம்பெற்றுள்ளது இன்னும் பல பரப்பில் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன்மூலம் இதைவிட பல தொல்பொருட்கள் கிடைப்பதில் ஆச்சர்யமில்லை 

கி.பி 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசனின் இராஜதானியாகக் கருப்படும் இக்கட்டிட சிதைவுகள் பலரும் அறியப்படாதவொன்றாக காணப்படுகின்து. 

இன்று தொல்லில் சின்னங்களின்  கேந்திரங்களான அநுராதபுரம் பொலந்நறுவை கண்டி போன்ற இடங்களை விட இவ்விடம் எவ்வித்திலும் குறைந்ததில்லை என என்னால் உறுதிபடக்கூற முடியும் 

 இவ்விடமானது தொல்பொருள் ஆர்வம் கொண்ட கலைப்பிரியர்களுக்கு தாகம் தணிப்பதாக இருப்பதோடு
இவ் அகழ்வுப்பணிகள் முடிந்தவுடன் பாடசாலைசாலை மாணவர்கள் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் செல்கின்ற பிரபல்யமான சுற்றுலா தளமாக காணப்படப்போவதில் எவ்வித சந்தேகமுமில்லை...





(GsC செய்திகளுக்காக மதன்)




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top