GuidePedia

0
வவுனியா மாணவி தமிழ்தினப்போட்டியில் தேசிய ரீதியில் சாதனை..



வவுனியா/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் =11 இல் கல்விகற்கும் மாணவி செல்வி . சங்கவி கனகரட்ணம் 2016.07.09 அன்று கல்வி அமைச்சு , இசுறுபாயவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரையாக்கமும், இலக்கிய நயத்தலும் போட்டி பிரிவு (4) இல் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் . அத்துடன் வட மாகாணமட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழித்தின உறுப்பெழுத்து (print script writing ) போட்டியில் தரம் =11 இல் முதலிடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் சிங்கள மொழித்தின போட்டியிலும் தேசியமட்டத்தில் பங்குபற்றி வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்கது . இவர் பாடசாலைக்கும் , வவுனியா மாவட்டத்துக்கும் பெருமையீட்டித் தந்துள்ளமையால் பாடசாலைஅதிபர் திருமதி.க. பாக்கியநாதன் அவர்களும் பாடசாலைச் சமூகமும் , வலயக்கல்விபணிப்பாளர்திருமதி. S.அன்ரன் சோமராஜா அவர்களும் பாராட்டுக்களையும் , நன்றியையும் தெரிவித்துள்ளனர் .

இவர் திரு. ந. கணகரட்ணம் ( ஆசிரியர்) , திருமதி , க. யசோதா ( ஆசிரியர்) ஆகியோரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது .



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top