சங்கர்புரம் மாதிரிக்கிராமம் வேம்பையடி பிள்ளையார் ஆலயத்தில் பாரம்பரிய தமிழ் கூத்துக்கலை நிகழ்வு..
சங்கர்புரம் மாதிரிக்கிராமம் ஸ்ரீ வேம்பையடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை பெருவிழாவினை முன்னிட்டு இறுதிநாளாகிய 8ம் நாள் புசையினை சிறப்பிக்கும் முகமாக கன்னங்குடா நாட்டுக்த்துக் கலைஞர்களின் "மகாபாரதம் பகலிரவுப் போர்" எனும் நாட்டுக்கூத்து ஆலய களரியில் இடம்பெற்றது விசெட அம்சமாக நீண்ட காலத்தின் பின் எமது பிரதேசத்தில் நாட்டுக்கூத்து இடம்பெற்றது இதில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கண்டுகளித்தனர்.. நவீன மோகத்தில் நவீன கலைகளின் மத்தியில் தமிழ்கலையின் பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கூத்தை அரங்கேற்றியது மிக சிறப்பான விடயமாகும்..நிருவாக சபைக்கு மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துரையிடுக