கண்ணகையம்மன் சடங்குற்சவம்.
===============
கிழக்கிலங்கையின் 11 ஆம் கிராம படர்கல் ஸ்ரீ பத்தினி அம்மன் ஆலய வருஷாபிக்ஷேக திருக்குளிர்த்தி சடங்கு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி செவ்வாய்க்கிழமை(29) அதிகாலை இடம்பெறவுள்ள திருக்குளிர்த்தியுடன் நிறைவு பெறவுள்ளது.
செ.பூபாலரெத்தினம்,தேவு உபாசகர் சிவஸ்ரீ த.சுதந்திரன் குருக்கள் ஆகிய பூசகர்களின் தலைமையில் நித்திய அபிசேக பூசைகளும் வெள்ளிக்கிழமை (25) அம்மன் ஊர்காவல் பண்ணலும் ஞாயிற்றுக்கிழமை (27) சிலம்பு அபிசேக கன்னிக்கால் வெட்டலும் அம்மனின் திருக்கல்யாணமும் திங்கட்கிழமை (28) வட்டுக்குத்துப் பூசையும் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.


கருத்துரையிடுக