GSC
மத்தியமுகாம் கிறீன்லைற் விளையாட்டுக்கழகம் தமது 42வது ஆண்டு நிறைவை இம்முறை தலைவர் வ. குமார் தலைமையில் சித்திரைக் குதூகலமாக கொண்டாடும் முகமாக பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நாடாத்தப்பட்டது. முதல் போட்டியாக அணிக்கு 11பேர் 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று இறுதிப்போட்டி 2018.04.13 வெள்ளிக்கிழமை பி.ப 3:00மணிக்கு ஆரம்பமாகியது இறுதிப்போட்டியில் திருப்பழுகாமம் பிறிலியண்ட் வி.க மற்றும் நிந்தவூர் அல்-அக்ஸா வி.க என்பன மோதி முதலில் துடுப்பெடுத்தாடிய அல்- அக்ஸா 8 ஓவர்களில் 90/4 பெற்றது.. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறிலியண்ட் 3.5ஓவர்கள் நிறைவில் 26 ஒட்டங்களை பெற்றிருந்தது. இடையில் தொடர் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பவர் பிளே ஓவர்கள் கணிப்பில் அல்-அக்ஸா வெற்றி பெற்றது இது 39 ஓட்டங்களை 2 ஓவர்களில் பெற்றிருந்தது.....




கருத்துரையிடுக