GuidePedia

0
                                                       

(GsC மதன்)

 அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை
வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில்
இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9 A சித்திகளைப்
பெற்றுள்ளனர்.
றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த
அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா
விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு
சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்
எஸ்.தியாகராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்களுக்கு நாவிதன்வெளிக்
கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்கள் இருவருக்கும் சம்மாந்துறை
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்
நஜீமும் தமது பாராட்டுக்களைத்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு k. தரணிக்கா,  A. கேதுசா ஆகியோர் 7A, 2B பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்தோடு 55 வருட பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9A பெற்றிருப்பது பாடசாலைக்கும் பாடசாலை சார் சமூகத்தினருக்குமிடையே பெரும் மகிழ்வை தருவதாக வகுப்பாசிரியர் திரு சந்திரகுமார், திருமதி. ஜெயரஞ்சினி ஆகியோர் எம்மிடம்  தெரிவித்தார்.. எமது நல்வாழ்த்துக்களை சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் கற்பித்த ஆசியர்களுக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். நன்றிகள் (GsC) 







முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top