பாலுராஜ் தொடர் தேசிய சாதனை...
(Kuru- Achsutharaj)
2012 - 2016 வரையில் கொழும்பில் நடை பெற்ற தேசிய காராத்தே சுற்றுப்போட்டியில் இவ் வருடமும் தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளதோடு தொடர்ச்சியாக ஐந்து முறை தங்கம் வென்று தமிழிற்கும், கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனை சேனைக்குடியிருப்புக்கும் பால்ராஜ் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார்.. அத்தோடு கராத்தே பிரிவில் தேசிய ரீதியில் கிழக்குமாகாணத்தை முதலிடத்தில் வைத்துள்ள பெருமை இவரையே சாரும். காராத்தே பிரிவில் இந்த வருடமும் campion ஆக தெரிவாகியதோடு இவ் வருடத்தோடு இரண்டு தடவைகள் best player எனும் பட்டத்தினையும் சுவிகரித்துள்ளார். சென்றவருடம் ஆசியன் கராத்தே போட்டிகளிலும் தங்கம் வென்ற ஈழ தமிழராவார். Sencei S.Murugendran பயிற்சியாளராக உள்ளதுடன் ஆசிய, தேசிய ரீதியில் சாதனை படைக்க இவரே உதவியும் ஊக்கமும் வழங்கியிருந்தார்.. எனினும் சாதனை தமிழனை ஊடகங்கள் வாயிலாக பாராட்டி கௌரவிக்க பின்னிப்பது வேதனையான விடயமாகும்.. பால்ராஜ் பிரபல தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளர் அன்னம்மா அவர்களின் புதல்வராவார்.. இச் சாதனையாளரை எமது கழகம் சார்பில் பாராட்டி வாழ்த்தி கௌரவிற்கின்றோம்..
எமது நல்வாழ்த்துக்கள்



கருத்துரையிடுக