GuidePedia

0
 பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தான்தோன்றீஸ்வரர் தேரேறி வந்தார்.
(GsC மதன்)
பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது.
இவ்வாறு பல சிறப்புடன் விளங்கும் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று மாலை அடியார்களின் அரோகரா கோஷத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பழமைவாய்ந்த சுமார் பல நூற்றண்டுக்கு முன்னர் மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர்வடம்பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலய வெளிவீதியில் முற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படும். இது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவம் நடைபெற்று வருகின்றது. நாளை காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


(GsC)



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top