மண்டூர் முருகனை நோக்கிய காவடியாட்டத்துடன் கண்கவர் ஆட்ட வகைகளும்..
சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலய திருவிழாவை சிறப்பிக்வென அடியார்கள் தூக்குக் காவடிகள், காவடிகள், பூச்சட்டி எடுத்தல் என பல நேத்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். அந்தவகை 18ம் நாள் திருவிழாவில் 11ம் கிராமம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து காவடியாட்டத்துடன் மயிலாட்டம், ஒயிலாட்டம், குரங்காட்டம், குதிரையாட்டம் என இந்து மத தன்மையிலான நடன நிகழ்ச்சிகளும் சிறப்பான முறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இன் நிகழ்வுகளை ஏராளமான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.. ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து அறையும் குறையுமாகவும், இசை நிகழ்ச்சியென காசை கரைக்காமல் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது சிறப்பான விடயமாகும்..
GsC




கருத்துரையிடுக