காட்டுயானைகளால் நிம்மதியின்றி வாழும் மக்கள் மற்றும் விவசாயிகள்..
(GsCமதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரைதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களிமடு, 16ம் கொளனி , பூச்சிக்கூடு , மூங்கிலடி வட்டை அக்கிலாவெளி போன்ற விவசாயம் மேற்கொள்ளப்படும் பல இடங்களிலும் மற்றும் வீட்டு வளவுகளிலும் இவ் காட்டுயானைகள் பல சொத்துக்களையும் பல பயனுள்ள தாவரங்களையும் சேதப்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.
இவ் வீடுகளில் இருந்த நெல் மூடைகள், அரிசி, மின்சாரப் பொருட்கள், வீட்டுப் பாவனை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை!
காட்டுயானைகளின் தாக்கம் தொடர்பாக இப் பிரதேச மக்களின் கோரிக்கையாவது, இப் பிரதேசத்திலுள்ள காட்டுயானைகளை கால தாமதம் ஏற்படாவண்ணம் வேறு பெரும் காடுப் பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி எங்களை அச்சமின்றி வாழ வழிபெற்றுத்தாருங்கள் என சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளிடம் கோரிநிற்கின்றனர்
இவ் வருடத்தில் காட்டு யானைத் தாக்குதல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடத்தில் மாத்திரம் பல வீடுகளுக்கு மேல் காட்டுயானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்கள்!
காட்டு யானைகளால் வீடு, உடமைகள், பயிர்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமாக்கப்படுவது வௌிப்படையாக தெரிந்துகொள்ளலாம். ஆனால் இம் மக்களின் அச்சநிலையினால் உளநலம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதனை யார் அறிவார்?. அத்துடன் இங்குள்ள சிறுவர்கள், மாணவர்கள் வீடுகளில் இருந்து படிக்க முடியாத நிலை உள்ளது. இது இம் மக்களின் எதிர்கால வாழ்வுக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை.



கருத்துரையிடுக