GuidePedia

0


நேற்று ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் இந்திய இராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார்.

அவரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது இந்திய அரசு..

பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் உஸ்மான் எனவும் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் அறிவித்துள்ளது உள்துறை அமைச்சு.20 வயதுடைய உஸ்மான் உருது மற்றும் பஞ்சாப் மொழிகளை நன்கு பேசுவதாக தெரிவித்த உள்துறை அமைச்சு, உஸ்மான் பிடிபடும்போது அவன் கையில் ஏகே -47 வகைத் துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறியுள்ளது.

இதற்கிடையே உஸ்மானுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இன்னுமோர் தீவிரவாதி இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்,ஆனால் அவர் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top