GuidePedia

0




நடப்பு ஆண்டில் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் 11 புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேடு மாடல்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவை பின்வருமாறு:-

1. ஐபோன் 6 எஸ்

வரும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சில் இருப்பது போன்ற போர்ஸ் டச் ஸ்கிரீனுடன் கூடிய ஐபோன் 6 எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளியாகிறது. தற்போதுள்ள ஐபோன்களில் உள்ள 8 மெகா பிக்சல் கேமிராவில் உள்ள கலர் ஆப்சன்களை போல சற்று மேம்படுத்தப்பட்டு 12 மெகா பிக்சல் சென்சார் கேமிராவுடன் வெளிவருகிறது.

2. மெகா சைஸ் ஐபோன்

ஐபோன் 6 எஸ்-ஐ விட பெரிய சைஸில் புதிய மாடல் ஒன்றை ஆப்பிள் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐபோன் 6 எஸ் பிளஸ் என பெயரிடப்படுகிறது.

3. மெகா சைஸ் ஐபேடு

வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் மாதம் புதிய ஐபேடு மாடல்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 12 இன்ச் அளவிற்கு பெரிய சைஸில் ஐபேடு கருவியை வெளியிட உள்ளதாக வால் ஸ்டிரீட் ஜர்னலில் தகவல் வெளியாகி இருக்கிறது.

4. ஐபேடு ஏர் மாடலில் புதிய வசதிகள்

ஏற்கனவே உள்ள பிளாக்சிப் 9.7 இன்ச் மாடலில் புதிய அப்டேட்கள் வெளியிடப்படுகிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட புதிய பிராசசருடனும் வெளிவருகிறது.

5. ஐபேடு மினி

இந்த ஆண்டிற்குள் ஸ்லிம்மாகவும், எடை குறைவாகவும் ஆப்பிள் நிறுவனம் ஐபேடு மினி மாடலை வெளியிடுகிறது.

6. புதிய ஆப்பிள் டிவி

3 ஆண்டுகளாக தனது செட்டாப் பாக்ஸிற்கு புதிய வெர்ஷனை வெளியிடாத ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் டிவியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. புதிய ஸ்டிரீமிங் டிவி சர்வீஸ் (கேபிள் சர்வீஸ்)

அதிகமான லோக்கல் சேனல்களுடன் புதிய கேபிள் சேவையை ஆப்பிள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. 21.5 இன்ச் ஸ்கிரீன் 4K ஐமேக்

4,096 x 2,304 ரெசல்யூசன்களை சப்போர்ட் செய்யும் அளவிற்கு புதிய ஐமேக் சாப்ட்வேர் வெளியிடப்படுகிறது.

9. புதிய ஆப்பிள் வாட்ச்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடலுடன் வெளியிட்டிருந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சில் தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. ஐ.ஓ.எஸ் 9 – இறுதி பதிப்பு வெளியீடு

ஐபோன், ஐபேடு கருவிகளுக்கான புதிய சாப்ட்வேர் அப்டேட்கள் வெளியிடப்படுகிறது. ஐ.ஓ.எஸ்.9 என அழைக்கப்படும் இந்த சாப்ட்வேரின் இறுதிப்பதிப்பாக ஸ்மார்ட்டர் சிரி, ஆப்பிள் மேப்களில் சற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள், மேம்படுத்தப்பட்ட ஆப்ஸ்களுடன் வெளிவருகிறது.

11. குட்டி ஐபோன்

4 இன்ச் ஸ்கிரீனில் குட்டி ஐபோனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஐபோன் 6 ஸி என பெயரிடப்பட்டுள்ளது. ஐபோன் 5 எஸ்-ஐ காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top