GuidePedia

0
உலக சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்ளும் இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஜப்பான் – யமகுச்சில் இடம்பெறவுள்ள 23 ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்ளும் இலங்கை சாரணர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
உலக சாரணர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைக் குழுவிற்கு தேசியக் கொடியை இதன் போது ஜனாதிபதி கையளித்தார்.
175 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்து 30,000 சாரணர்கள் இம்முறை ஜம்போரியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜூலை மாதம் 29ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top