GuidePedia

0
சாதா­ரண கார் தரிப்­பி­டத்தில் நிறுத்தக் கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெ­ரிக்க விஸ்­கொன்ஸின் மாநி­லத்­தி­லுள்ள ஒஷ்கொஷ் நகரில் இடம்­பெற்ற வரு­டாந்த பரீட்­சார்த்த வானூர்தி சங்க நிகழ்வில் அறி­மு­கப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டது.

ரி.எப்.- எக்ஸ் என அழைக்­கப்­படும் இந்த பறக்கும் காரா­னது தரையில் மணிக்கு 200 மைல் வேகத்­திலும் வானில் மணிக்கு 500 மைல் வேகத்­திலும் பய­ணிக்கும் வல்­ல­மையைக் கொண்­டது.
இந்த 4 பேர் பய­ணிக்கக் கூடிய கார் சார­தி­யாலும் கணினி மூலம் தன்­னி­யக்க ரீதி­யிலும் செயற்­ப­டுத்தக் கூடி­ய­தாகும்.
இதன் கார­ண­மாக இந்தக் காரில் பய­ணிப்­ப­வர்கள் செல்ல வேண்­டிய பிராந்­தி­யத்தை கணி­னியில் பதிவு செய்யும் போது அது குறிப்­பிட்ட இடம் பறக்கும் காரை தரை­யி­றக்­கு­வ­தற்கு உகந்த இட­மாக அமை­யா­விடில் தரை­யி­றக்­கு­வ­தற்கு வேறு இடத்தைத் தெரிவு செய்­வ­தற்கு கோரும்.
எனினும் இந்தக் காரை நடை­முறைப் பயன்­பாட்­டிற்கு உகந்­த­தாக மேம்­ப­டுத்­து­வ­தற்கு இன்னும் 8 முதல் 12 வரு­டங்கள் செல்­லலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இந்தக் காரை 183,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விற்பனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top