GuidePedia

0


நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியா வந்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.



ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவந்டைந்துள்ள நிலையில் இன்று 4-வது போட்டி தொடங்கியது.

இதில் விளையாடி வரும் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், ஐந்தாயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 53 ரன்கள் எடுத்திருக்கும் போது இந்த மைல் கல்லை எட்டினார். மிதாலி ராஜ் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். 32 வயதாகும் மிதாலி, மொத்தம் 157 போட்டிகளில் விளையாடி 5 சதம், 37 அரை சதத்துடன் 5029 ரன்கள் எடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் மிதாலி ராஜை விட இங்கிலாந்து வீராங்கனை எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இவர், 185 போட்டிகளில் 5812 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இவர் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top