GuidePedia

0



உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை

தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி வீரர் கிறிஸ் சிரிலோ வெற்றிக்கான கோலை அடித்தார். 

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தையும், நியூசிலாந்து அணி 4-வது இடத்தையும் பெற்றன. இந்திய அணி 5-வது இடம் பிடித்து அடுத்த (2016) ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top