மறத் தமிழனின் திறனை உலகெங்கும் பறை சாற்றிய மாமன்னர் இராஜ ராஜ சோழரின் மகனான
#இராஜேந்திர_சோழரின்_கங்கை_கொண்ட_சோழபுரம்,
.
பிரகதீஸ்வரர்_கோவில் இந்த கோவிலின் சிறப்பு என்ன என்றால் இராஜராஜசோழன் மகன் இராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது.
சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது.
.
அதுமட்டுமில்லாமல் காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பிய போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன்....
சோழ நாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணி; முயன்றான்.....
இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கைநீர் கொண்டுவர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான்.
.
அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் - கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகும்.
.
இது 1000 வருட வரலாறும் பாரம்பரியமும் கொண்ட கொண்ட சிவதலம்.
தஞ்சை பெரும் கோயில் போன்றே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த பின்னரே கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
தந்தை கட்டிய கோபுரத்தை மிஞ்சக் கூடாது என்பதற்காக இவ் ஆலய கோபுரத்தை 180 அடி உயரத்தில் கட்டினார்
.
தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான சிவலிங்கம் இருப்பது இங்கு தான். இங்குள்ள சிவலிங்கம் 13.5 அடி உயரம். 60 அடி சுற்றளவும் கொண்டது. அத்தோடு இந்த சிவலிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு.
.
மேலும் சிவலிங்கத்தின் அடியில் சந்திர காந்தக் கல் வைத்துள்ளனர் என்பதால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தைத் தந்து வருகிறது என்பதை அனுபவித்து அறிந்த அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
.
சிவலிங்கம் அமைக்கப்பட்டிருக்கும் இடமான ஆவுடையைச் சுற்றி, பலகை கட்டி அதன் மீது நின்று கொண்டு அர்ச்சர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி.
.
அதுமட்டுமில்லாமல் இங்குள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது .இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது. இந்த நந்தி மூலஸ்தான லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.
.
தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி.
அத்தோடு இங்குள்ள நவகிரகம் ஒரே கல்லில் தாமரைப் பூ வடிவில் வெகு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
.
இந்த தலத்து அம்மனின் பெயர் பெரியநாயகி. பெயருக்கு ஏற்றார்போல் 9 1/2 அடி உயரத்தில் மிக அருமையாக அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு சிற்பமும் நுணுக்கமான கலைநயத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
.
தஞ்சைக்கு அடுத்து இந்த கோபுர விமானம் தான் தமிழகத்தில் பெரியது. இதனுடைய கட்டுமானப்பணிகள் சோழர் காலத்தில் உள்ள கட்டிடக்கலையின் திறமையை வெளிப்படுத்துகிறது.
இந்த கோபுரக் கலசத்தின் நிழல் பூமியில் விழாது என்பது மிகவும் அதிசயமானது.
.
இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது .
தகவல் ; இணையம்
தொகுப்பு : விஜிவன் விஜய்

கருத்துரையிடுக