GuidePedia

0
மத்தியமுகாம் -05 கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிருவாகம் தெரிவு..

(த.சுதன்)
மத்தியமாகாம்-05  கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் 2016.09.02 அன்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் தலைவர் திரு அமிர்தலிங்கம் தலைமையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம நிலதாரி, பொருளாதார உத்தியோகத்தர்கள் முன்னிலையில் காலை 9:00 மணிக்கு நடைபெற்றது.இப் பொதுக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக புதிய நிருவாகத்தெரிவு இடம்பெற்றது இதில் பலர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக த. சுதன் அவர்களும் செயலாளராக திரு சிவநேசராசா அவர்களும் பொருளாளராக திரு சிவானந்தராசா அவர்களும் மற்றும் உபதலைவராக தெ.பிரபாகரன் அவர்களும் உட்பட 8 நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் புதிய தலைவர் உரையாற்றுகையில் தமது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சிறப்பாக செயற்படுவது சம்பந்தமாக பேசியிருந்தார்..



புதிய நிருவாகசபையினருக்கு எது கழகத்தின் நல்வாழ்த்துக்கள் உம்மால் எமது கிராமம் அபிவிருத்தி அடையட்டும்..




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top