GuidePedia

0
விறகு வெட்ட சென்ற போது கையில் படுகாயமடைந்த 10 வயதான ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் இன்று இடம்பெற்ற புலமைபரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
(aji) குறித்த மாணவர் கடந்த 20ம் திகதி அன்று விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி மாணவர் விறகு வெட்டிக்கொண்டிருந்த போது மாணவனின் வலக்கையில் இருந்த கத்தி நழுவி இடக் கையை வெட்டியுள்ளது.
சம்பவத்தை அடுத்து சிறுவன் உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி – பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த சிறுவனின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்த டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர், சத்திர சிகிச்சையின் மூலம் கையை பொருத்த முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
எனினும் குறித்த மாணவன் இன்று இடம்பெற்ற பரீட்சையில் தோற்றியிருந்தமை பாராட்டதக்க விடயம் என மாணவனின் வகுப்பு ஆசிரியர்கள் உட்பட பலர் தெரிவித்திருந்தனர்.by GsC




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top