GuidePedia

0
தேர்தல் பணிகளில் இரண்டு இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

எதிர்வரும் பாராளுமனற் தேர்லுக்காக இரண்டு இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
வாக்களிப்பு நிலைய பணிகளுக்காக ஒரு இலட்சத்தி 20 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்கு 75 ஆயிரம் அதிகாரிகள் நியமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 25,000 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top