GuidePedia

0
நாட்டில் ஊழலை ஒழிப்போம் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

பொதுத் தேர்தலில் மெதிரிகிரிய தேர்தல் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நேற்று நடைபெற்றது.
மெதிரிகிரிய சந்தைப்பகுதியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதன் போது மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் பிரதான ஐந்து விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டினார்.
பொருளாதாரம், தொழில்,வரவுக்கான வழி; உட்கட்டமைப்பு வசதி; ஊழலால் நிறைந்து
காணப்பட்ட நாட்டில் ஊழலை ஒழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், வௌ்ளை வேனை இல்லாதொழித்தல்; கல்வியை மேம்படுத்தல் ஆகியவையே ஐம்பெரும் அபிவிருத்தி திட்டங்களாகும். அத்துடன் அடுத்த வாரமளவில் இது தொடர்பிலான அறிவித்தல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top