GuidePedia

0
அமைச்சர்களின் ஊழியர்களின் வாகனங்களை மீளக் கையளிப்பதற்கான கால அவசாகம் நிறைவு

அமைச்சர்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளக் கையளிப்பதற்கான கால அவகாசம் நிறைவுபெற்றுள்ளது.
இதற்கமைய வாகனங்களை மீளக் கையளிக்கத் தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது நிருவாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகங்களை நேற்றைய தினத்திற்குள் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தல் விடுத்திருந்ததாக அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே மேலும் தெரிவித்துள்ளார்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top