GuidePedia

0
பேப்பரில் செல்போன் உருவாக்கிய அமெரிக்க பெண்

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல் பேப்பரில் செல்போன் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த செல்போன் 3 கடனட்டை அளவு பருமனுடையது. இது மீண்டும் அழித்து விட்டு தயாரிக்கக் கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செல்போனில் ஒருவர் மறுமுனையில் இருந்து பேசுவதை கேட்க மட்டுமே முடியும். பதிலுக்கு டயல் செய்து பேச முடியாது. இதை 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே பேச முடியும்.
அதன்பின்னர் அதை அப்படியே வீசி எறிந்து விட முடியும். அதன் பின்னர் அதில் பேச முடியாது. அந்த செல்போன் மிகவும் மெலிதாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு அதை இழுத்து கொள்ள முடியும்.
அதன்விலை ரூ.1,300 மட்டுமே. பேசி முடித்ததும் குப்பை கூடையில் வீசாமல் கடையில் திருப்பி கொடுத்தால் ரூ.150 முதல் ரூ.200 வரை திரும்ப வழங்கப்படுகிறது.
அது 2 முதல் 3 இஞ்ச் நீளம் வரை உள்ளது. அதன் தயாரிப்பு தொழில் நுட்பத்தை அல்ட்ஸ்சல் நியூஜெர்சியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். அதற்கான கண்டுபிடிப்பு உரிமை கோரியுள்ளார்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top