GuidePedia

0



மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் விநாயகபுரத்தில் 13 வயது சிறுமியொருத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது சம்பந்தமாக தமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 30 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றுகின்றார். தந்தை தாயை விட்டுப் பிரிந்து வேறு திருமணம் செய்துள்ள நிலையில் சிறுமி அயல் வீட்டாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபரான கல்குடா மருதநகர் விநாயகர்புரத்தைச் சேர்ந்த காளியப்பு பாஸ்கரன் (வயது-30) என்ற நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதுபற்றி சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டார் கல்குடா பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் மேற்படி சந்தேக நபரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதுபற்றிய விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக நவரெட்ன தெரிவித்தார்.

-அப்துல்லாஹ்-



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top