GuidePedia

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் செனன் பகுதியில் இன்று  பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பஸ் வண்டி ஒன்றும்  பவுஸர் வண்டி ஒன்றும் நேர்க்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top