GuidePedia

0



எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் 410 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் குறித்து 31 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டு காயமடைந்த 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை , இரத்தினப்புரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை வன்முறை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறயமை குறித்து 521 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கப்பே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுகின்ற நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதாக கப்பே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 346 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top