GuidePedia

0


பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபரில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 2,85,000 மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நேற்றுவரை 22 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் மேலும் 24 பேரது உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதனால், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை தற்போது 46 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதுதவிர வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top