GuidePedia

0


க.பொ.த உயர்தர பரீட்சைக்காக நாடு முழுவதும் 303 இணைப்பு மத்திய நிலையங்களின் கீழ் 2180 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் மீண்டும் 24ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை ரீதியாக இம்முறை 23,072 பேரும் தனிப்பட்ட ரீதியாக 72,997 பேரும் விண்ணப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் தனிப்பட்டரீதியான பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களுடைய தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top